Show all

தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக வீரர்கள் தங்கம்

சென்னை நேரு விளையாட்டரங்கில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 55வது முறையாக தேசிய அளவிலான சீனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. வரும் திங்கட்கிழமை வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா முழுவதும் 22 மாநிலங்களில் இருந்து 635 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டிகளில் அனைத்து வகையான பிரிவுகளிலும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் 22 முதல் 30 ஆம் தேதி வரை சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.

ஆடவர் பிரிவில் நடைபெற்ற 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்றார். பந்தய இலக்கை அவர் 14 நிமிடங்கள், 12 வினாடிகளில் கடந்தார். ஆனால், உலக தடகள போட்டிக்கு தகுதி பெற 13 நிமிடங்கள் 25 வினாடிகளுக்குள் வரவேண்டும். 87 விநாடிகள் கூடுதலாக எடுத்துக்கொண்டதால் அதில் பங்கேற்பதற்கான வாய்ப்பை நழுவ விட்டார்.

இதேபோல், மகளிர் பிரிவு 5000 மீட்டர் பிரிவில் தமிழக வீராங்கனை சூர்யா பந்தய இலக்கை 16 நிமிடங்கள் 1 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இருப்பினும், இவரும் உலக தடகள போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இழந்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.