Show all

இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மரணம்

அமைச்சர் செந்தூர் பாண்டியன் மாரடைப்பு காரணமாக நீண்ட நாட்களாக, மருத்துவமனையில் இருந்ததால், அவர் கவனித்து வந்த இந்து சமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக அதாவது முன்னாள் அமைச்சராக செந்தூர் பாண்டியன் இருந்தார்.மே, 23ம் தேதி, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற போது அமைச்சரவையில் இருந்து செந்தூர் பாண்டியன் நீக்கப்பட்டார்.

ஆறு மாதங்களாக, இதய கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை, 6:50 மணிக்கு, சிகிச்சை பலனின்றி, செந்தூர் பாண்டியன் இறந்தார்.தகவலறிந்து, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின், அவரது உடல், ஆம்புலன்ஸ் மூலம் செங்கோட்டை கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று, இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.