Show all

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையே 2வது ஒருநாள் போட்டி

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதைதொடர்ந்து 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. கடைசி பந்து வரை பரபரப்பாக அமைந்த அந்த போட்டியில், இந்திய அணி சற்று தடுமாற்றத்துடனேயே விளையாடியது. இந்நிலையில் அதே ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இரண்டாவது ஒரு நாள் போட்டி நடக்கிறது. இரண்டு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: ரகானே (கேப்டன்), உத்தப்பா, முரளி விஜய், ஸ்டூவர்ட் பின்னி, மனோஜ் திவாரி, ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், தவால் குல்கர்னி, புவனேஷ்வர் குமார், மனிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், அம்பாதி ராயுடு, சந்தீப் ஷர்மா, மோகித் ஷர்மா.

ஜிம்பாப்வே: எல்டன் சிகும்புரா (கேப்டன்), ரெஜிஸ் சகாப்வா, சாமு சிபாபா, கிரீம் கிரீமர், நெவில் மட்விஸா, ஹாமில்டன் மசகட்சா, ரிச்மண்ட் முதும்பாமி, தினஷே பன்யங்கரா, சிக்கந்தர் ரஸா, டொனால்ட் டிரிபானோ, பிராஸ்பர் உத்செயா, பிரையன் விட்டோரி, மால்கம் வாலர், ஷான் வில்லியம்ஸ்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.