Show all

இந்தியா–ஜிம்பாப்வே முதலாவது ஒரு நாள் போட்டியில் இன்று மோதல்

மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சென்றுள்ளது.இந்தியா–ஜிம்பாப்வே மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் இன்று நடக்கிறது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, அஸ்வின் போன்ற சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கேப்டன் ரகானே தலைமையிலான இந்திய அணி நேற்று ஜிம்பாப்வேக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி அண்மையில் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் 1–2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. மேலும் இந்த தொடரிலும் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் கொண்ட அணியே சென்றுள்ளது. ரகானே தலைமையிலான இந்திய அணி எப்படி விளையாடுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் டென் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

போட்டி அட்டவணை

ஜூலை.10 முதலாவது ஒரு நாள் போட்டி பகல் 12.30 மணி

ஜூலை.12 2–வது ஒரு நாள் போட்டி பகல் 12.30 மணி

ஜூலை.14 3–வது ஒரு நாள் போட்டி பகல் 12.30 மணி

ஜூலை.17 முதலாவது 20 ஓவர் போட்டி மாலை 4.30 மணி

ஜூலை.19 2–வது 20 ஓவர் போட்டி மாலை 4.30 மணி

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.