Show all

அரசு ஊழியர்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெற வசதி

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற இதுவரை கடும் நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது மிகவும் எளிமையாக்கியுள்ளது.அதன்டி, முன்பு பாஸ்போர்ட்டை பெறவேண்டும் என்றால், அரசுத் துறையின் ஆட்சேபனையின்மைச் சான்று, அடையாளச் சான்று போன்றவற்றை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் கேட்டு மண்டல அலுவலகத்திடம் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, அவர் பணியாற்றும் துறையின் உயர் அதிகாரிக்கு முன்னறிவிப்பு கடிதத்தை கொடுத்தால் மட்டும் போதுமானது.ஒரு சில காரணங்களுக்காக, பாஸ்போர்ட் வழங்கக்கூடாது எனில், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு துறை உயர் அதிகாரி கடிதம் மூலம் ஆட்சேபனைகளைத் தெரிவித்து, விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுவிடலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.