Show all

மதுபான ஆய்வு அறிக்கையை டாஸ்மாக் சமர்பிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக், தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது.சாவு எத்தனை? மேலும், மதுபானங்கள் குடித்து எத்தனைபேர் ஆண்டுக்கு இறக்கின்றனர்? என்ற கேள்விக்கு, அதுகுறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்று டாஸ்மாக் நிறுவனம் கூறி உள்ளது.இதையடுத்து தடயஅறிவியல் துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுகுறித்து விளக்கம் கேட்டேன்.

அதற்கு பதில் அளித்த அத்துறையின் இயக்குனர், ‘மது பானங்கள் தரம், நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ததற்கான எந்த ஆதாரங்களும் தங்களிடம் இல்லை’ என்று கூறி உள்ளார்.இதையடுத்து தரமணியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமாக தேசிய ஆய்வுக்கூடத்தின் இயக்குனரிடம் சில விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டேன்.
அதற்கு பதில் அளித்த இயக்குனர், ‘மதுபானங்களில் உள்ள நச்சுத்தன்மையை ஆய்வு செய்ய தங்களிடம் எந்த ஒரு வசதியும் இல்லை’ என்று கூறி இருக்கிறார்.

இதனால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் நச்சுதன்மை குறித்து ஆய்வு செய்யவும், எந்த மதுபானத்தில் அதிக அளவு நச்சுத்தன்மை உள்ளது? என்பதை கண்டறியவும், அதுபோன்ற மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் கோரி தமிழக தலைமைச் செயலாளர், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தான் வழக்கு தொடர்ந்ததாக சென்னையை சேர்ந்த தேவராஜன் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.