இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆசஸ் தொடர் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு கார்ப்பில் தொடங்குகிறது. இந்த தொடர் உலக மக்களிடையே மிகவும் அதிக வரவேற்பையும் மட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடர் மேலும் இந்த தொடரில் மட்டும் இரு அணி வீரர்களும் மிகுந்த ஆக்ரோசமாக விளையாடுவதை பார்க்க முடியும். இந்த தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரு நாட்டிலும் தலா ஒரு முறை நடைபெறும்.
கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. அதற்கு பலி தீர்க்கும் வகையில் இங்கிலாந்து வெற்றிபெற போராடும் மேலும் 2001 ஆம் ஆண்டு ஸ்டீவ் வாக் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை வென்றது அதற்கு பிறகு ஒரு முறை கூட வென்றதில்லை. எனவே அந்த வரலாற்றை மாற்ற ஆஸ்திரேலியாவும் கடுமையாக போராடும்.
ஆஸ்திரேலியா தற்போது மிகவும் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது கடைசியாக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடர்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது மேலும் இங்கிலாந்து சொந்த மண்ணில் விளையாடுவதால் அந்த நாய்க்கு அது மிகுந்த பலமாகவே இருக்கும்.
இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.