Show all

ஏழை மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டு உத்தரவு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாற்றத்துக்கான இந்தியா’ என்ற அமைப்பின் இயக்குனரான ஏ.நாராயணன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்-'இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது, மொத்த இடங்களில் 25 சதவீத இடங்களை ஏழை மற்றும் சமுதாயத்தின் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றமானது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.