Show all

திருப்பூர் அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டன்சிட்டி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 6-15க்கு கிளம்பி காலை 7-30க்கு திருப்பூரிலிருந்து ஊத்துக்குளிக்கு வந்து கொண்டிருந்தது. அதே வழித்தடத்தில் ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி ரயில் நின்று கொண்டிருந்தது அதே வழித்தடத்தில் ஊத்துக்குளியில் நில்லாத இன்டன்சிட்டி ரயில் வருவதைப் பார்த்து சபரி ரயில் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.

அவர் உடனடியாக மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க அவர்கள் இன்டனசிட்டி ஓட்டுநரை அழைத்து தகவல் தெரிவிக்க இன்டன்சிட்டி ரயிலின் வேகம் குறைக்கப் பட்டு 300மீட்டர் இடைவெளியில் விபத்து தவிர்க்கப் பட்டது.

இந்த இரண்டு ரயில்களிலும் 1500 பேர்கள் பயணித்தனர். இந்த இரண்டு ரயில்களும் 2மணி நேரம் தாமதமாகச் சென்றன. இன்டன்சிட்டி ரயிலை தடம் மாற்றி விட்டிருக்க வேண்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் முகேஷ்குமாரும் ஊத்துக்குளி பாயிண்ட் மேன் திலீப்குமாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.