Show all

பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுவின் சலுகைகள் குறித்த பரிந்துரைகளை மைய அரசு நிராகரித்தது

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் 70விழுக்காடு பரிந்துரைகளை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நிராகரித்தது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் குழு முன்வைத்தது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம், டெல்லியை விட்டு வெளியே செல்லும் போது பாதுகாப்பு வசதி, முன்னால் உறுப்பினர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் மருத்துவ வசதி தற்போதைய உறுப்பினர்களுக்கு 34க்கு பதிலாக 48விமானச் சீட்டுக்கள், வீட்டுக்கடன், தினப்படி 2000லிருந்து 5000, போன்ற பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.

சில கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட உள்ளன.
வாகனக்கடன் வசதி 4,00,000லிருந்து 10,00,000.
உறுப்பினர் சம்பளம் 50,000லிருந்து 1,00,000.
ஓய்வூதியம்20,000லிருந்து 35,000.
தொகுதிப்படி45,000லிருந்து 80,000.
உறுப்புனர்களின் தனி அலுவலர் சம்பளம் 30,000லிருந்து 50,000.
ஆகியன பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்ற அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.