Show all

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த படகு பிடிபட்டது

இந்திய கடல் எல்லைக்குள் படகு ஒன்று அத்துமீறி நுழைந்ததாக கடலோர காவற்படைக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்து செயல்பட்டு அவர்கள் அப்படகை கைபற்றினர்.அதில் இருந்த ஈரான் நாட்டினர் 12 பேரை திருவனந்தபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கேரள மாநிலம் ஆழப்புழா கடல் பகுதியில் 52 நாட்டிகல் மைல் தூரத்தில் ஒரு மர்ம படகு நேற்று அதிகாலை வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அந்த படகை கடலோர காவல் படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்தனர்.அவர்களிடம் சாட்டிலைட் போன்கள் இருந்தன. அந்த படகில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் அடையாள அட்டை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த படகு கடந்த மே 25–ந் தேதி ஈரானில் உள்ள கலத் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டது தெரிய வந்தது.

அவர்களுக்கு கடத்தல் தொழிலில் தொடர்பு இருக்கலாம் என கடற்படை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.இது குறித்து கேரள போலீசாரும் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.