Show all

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா

மகளிர் 6-வது டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று தனது 2–வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக பிஸ்மா மாரூப் 53 ரன்களும் மற்றும் நிதா தர் 52 ரன்களும் குவித்தனர். இந்திய தரப்பில் ஹேமலதா மற்றும் பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக மிதாலி ராஜ் 56 ரன்களும், மந்தனா 26 ரன்களும் எடுத்தனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.