Show all

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை 2-வது இடத்தில் அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி)  புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் டெஸ்ட்போட்டி பந்து வீச்சாளர்களில் 2 வது இடத்தை பிடித்து உள்ளார்.பேட்டிங் தரவரிசையில் இந்தியாவை பொறுத்த அளவில் முரளி விஜய், அதிகப்படியாக 12-வது ரேங்கிலுள்ளார். கேப்டன் விராட் கோலி, ஒரு இடம் முன்னேறி 16வது இடத்தை பிடித்துள்ளார். தவான், ஒரு இடம் முன்னேறி, 32வது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகிய இருவரும், டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் ரேங்க்கை பகிர்ந்து கொண்டுள்ளனர். டிவில்லியர்ஸ் 2 இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 3-வது ரேங்கிலுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.