Show all

இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரருடன், நோவாக் ஜோகோவிச் மோத உள்ளார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச், சுவிஸ் வீரர் ரோஜர் பெடரருடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் உலக நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், நடப்பு சாம்பியனான குரேஷியாவின் மரீன் சிலிச்சுடன் மோதினார். 1 மணி 25 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-0, 6-1, 6-2 என நேர் செட்களில் சிலிச்சை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் 17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவரான சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர், சக நாட்டவரான வாவ்ரிங்காவுடன் மோதினார். சிறப்பான பார்மில் உள்ள ரோஜர் பெடரர், 92 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 6-4, 6-3, 6-1 என நேர் செட்களில் வாவ்ரிங்காவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரருடன், நோவாக் ஜோகோவிச் மோத உள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.