Show all

மீதமுள்ள ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின் பங்கேற்பது சந்தேகமே

கான்பூரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் எதிர்பாராத விதமாக காயமடைந்தார். அஸ்வின் தனது 4–வது ஓவரில் வீசிய பந்தை டிவில்லியர்ஸ் எதிர்கொண்டார். அப்போது அவர் அடித்த பந்தை பாய்ந்து விழுந்து பிடித்த போது விலாப்பகுதியில் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இரு பந்து வீசிய அவர் வலி தாங்க முடியாமல் பாதியிலேயே வெளியேறினார். முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மீண்டும் களம் இறங்கிய அஸ்வின் மேலும் ஒரு ஓவர் வீசிவிட்டு மறுபடியும் வெளியேறினார்.

அஸ்வின் வெறும் 4.4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசியிருந்தார். அவரது விலகல், தென்ஆப்பிரிக்காவின் ரன் குவிப்புக்கு சாதகமாக மாறியது. அஸ்வினுக்கு இது 100–வது ஒரு நாள் போட்டி என்பது கவனிக்கத்தக்கது.

அஸ்வினின் காயத்தன்மை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு ஆராய்ந்து, காயம் குணமடைய எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை அறிவிக்கும். அஸ்வினின் காயத்தை கருத்தில் கொண்டு, 2–வது ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அழைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின் பங்கேற்பது சந்தேகமே.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.