Show all

2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி

ஐரோப்பிய மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஸ்பெயினை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 36 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 1980 இல் தகுதி பெற்றது. கடந்த ஜூலை மாதம் நடந்த உலக ஹாக்கி லீக் அரை இறுதியில் இந்திய அணி 5–வது இடத்தை பிடித்து தகுதி பெறுவதற்கான நிலையை எட்டியது.

இந்நிலையில் இங்கிலாந்து ஸ்பெயினை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் ஒலிம்பிக் போட்டி தகுதி உறுதியாகி விட்டது. ஏற்கனவே  தென் கொரியா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.