Show all

படேல் இனத்தலைவர் ஹர்திக் படேலை போலீசார் தடுப்புக்காவலில் வைத்தனர்.

குஜராத்தில் இட ஒதுக்கீட்டு கேட்டு போராடி வரும் படேல் இனத்தலைவர் ஹர்திக் படேலை போலீசார் தடுப்புக்காவலில் வைத்தனர்.

குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் பட்டேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அண்மைக்காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு ஹர்திக் படேல் என்ற இளைஞர் தலைமை தாங்கிவருகிறார்.

கடந்த 25-ம் தேதி அகமதாபாத்தில் இவர்களின் பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் அம்மாநிலத்தில் பல நாட்களுக்கு பதற்றம் நிலவியது. ஹர்திக் படேல் தலைமையில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இட ஒதுக்கீடு கோரி ஈக்தா யாத்ரா என்ற போராட்டத்தை அங்குள்ள நவ்சாரி மாவட்டத்தில் இன்று நடத்துவதற்க்கு ஹர்திக் படேல்  திட்டமிட்டிருந்ததார். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை மேற்கோள் காட்டி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இருப்பினும், தடையை மீறி பேரணி நடத்தப்படும் என்று ஹர்திக் படேல் உறுதி பட தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து போராட்டம் நடைபெறுவதாக இருந்த மங்கத் சவுக் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்கும்  வகையில்  ஹர்திக் படேலை போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். வராச்சா போலீஸ் நிலையத்திற்கு ஹர்திக் படேல் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருடன் 78 போராட்டகாரர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹர்திக் படேல், குஜராத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த அரசு விரும்புகிறது என்று குற்றம் சாட்டினார்.

ரிவர்ஸ் தண்டிமார்ச் போராட்டத்தை நடத்த உள்ளதாக கடந்த இருவாரங்களில் ஹர்தி படேல் அறிவித்த போது, அவரது போராட்டத்திற்கு இருமுறை அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.