Show all

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா, பெயஸ் ஜோடிகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழாவில், பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சாவும், கலப்பு இரட்டையரில் லியாண்டர் பெயசும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிசின் அசத்தல் தொடருகிறது. இதன் அரைஇறுதியில் இவர்கள் 6–4, 6–1 என்ற நேர் செட்டில் இத்தாலியின் சாரா எர்ரானி–பிளவியா பென்னட்டா இணையை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். சானியா– ஹிங்கிஸ் ஜோடி இறுதி ஆட்டத்தில் டெல்லாக்குவா (ஆஸ்திரேலியா)– ஷிவ்டோவா (கஜகஸ்தான்) அல்லது அன்ன லீனா குரோனிபெல்டு (ஜெர்மனி)– கோகோ வன்டேவெஜ் (அமெரிக்கா) ஆகிய இணைகளில் ஒன்றை சந்திக்கும்.

கலப்பு இரட்டையர் பிரிவில் ஹிங்கிஸ்–பெயஸ் ஜோடி 6–2, 7–5 என்ற நேர் செட்டில் யங் ஜான் சான் (சீனத்தைபே)– ரோகன் போபண்ணா (இந்தியா) கூட்டணியை வீழ்த்தி இறுதி சுற்றை எட்டியது. மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் ஹிங்கிஸ்–பெயஸ் ஜோடியினர் அமெரிக்காவின் பெதானி மாடக் சான்ட்ஸ்–சாம் குயரியை சந்திக்க இருக்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.