Show all

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா தோல்வி

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டத்தில் உலக தர வரிசையில் முதலிடத்தில் இருப்பவரும், சமீபத்தில் நடந்த உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தவருமான இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், 18–ம் நிலை வீராங்கனை மினாட்சு மிதானியை (ஜப்பான்) சந்தித்தார்.

40 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் மினாட்சு மிதானி 21–13, 21–16 என்ற நேர்செட்டில் சாய்னாவுக்கு அதிர்ச்சி அளித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.