Show all

பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலை சமாளிக்க

தீபாவளி திருநாளில் சென்னையில் வசிக்கும் பெரும்பலோனர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் காரில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது தாம்பரம் - பெருங்களத்தூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையிலேயே செல்வார்கள்.

இதே பாதை வழியாகத்தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் ஆகியவனவும் செல்லும். தீபாவளி போன்ற திருவிழா நாட்களில் 2 நாட்களுக்கு முன்னதாகவே தங்களது சொந்த கார்களில் ஊருக்கு செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.

அப்போது வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். இதனால் தாம்பரம் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்தச் சாலையை கடப்பதற்கு சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகி விடுகிறது. இதனால் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில நேரங்களில் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு வெகு நேரம் காத்திருக்கின்றனர். சில நேரங்களில் அந்தப் பகுதிகளில் பேருந்து நிற்காமல் செல்லுவதால் பயணிகள் ஏமற்றத்துடன் வீட்டிற்கு திரும்பிகின்றனர்.

பொதுமக்களின் சிரமதத்தை கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களுக்கு  தங்களது சொந்த கார் மற்றும் தனியார் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தாம்பரம் - பெருங்களத்தூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல வேண்டாம் என்று சென்னை போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு பதிலாக மாற்று வழிகளை அடையாளம் காட்டியுள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

தீபாவளியை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வாகனங்களில் பயணிப்பார்கள். இதனால் ஜி.எஸ்.டி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக வாய்ப்பிருக்கிறது. எனவே இன்று முதல் தனியார் வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் தாம்பரம் பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து கீழ்கண்ட சாலைகள் வழியாகவும் செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்.

ராஜீவ் காந்தி சாலை (பழைய மகாபலிபுரம் சாலை) வழியாக துரைப்பாக்கம், கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம் பைபாஸ் வழியாக செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்.

கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக சென்று அக்கரை, முட்டுக்காடு, கோவளம், மகாபலிபுரம் பைபாஸ், கருங்குழி, திருக்கழுக்குன்றம் பைபாஸ் வழியாகவும் செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்.

பூந்தமல்லி சாலை வழியாக மதுரவாயல் சந்திப்பு, வேலப்பன் சாவடி, சவிதா பல் மருத்துவக்கல்லூரி, பூந்தமல்லி டெலிபோன் எக்சேன்ஞ் வழியாக நசரத்பேட்டை சென்று பூந்தமல்லி பைபாஸ் சாலையிலிருந்து புதிதாக போடப்பட்டுள்ள 400 அடி வெளிப்புறச்சாலை வழியாக நேராக வண்டலூர் அருகில் ஜி.எஸ்.டி சாலையை அடைந்து சென்னை- திருச்சி நெடுஞ்சாலையைச் சென்றடையலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.