Show all

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவிப்பு

தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 629 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் 6-வது நபராக களம் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 198 பந்தில் 258 ரன்கள் குவித்தார். மேலும், அதிகவேக இரட்டை சதம் அடித்த 2-வது நபர் என்ற பெயரையும் பெற்றார். இங்கிலாந்து அணி கடந்த 2011-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் 600 ரன்னைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அம்லா 157 ரன்கள் குவித்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் அம்லா 157 ரன்களுடனும் டுப்லேசிஸ் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.