Show all

இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை 2–0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3–2 என்ற கணக்கிலும் தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் மொகாலியில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கேப்டன் வீராட் கோலி தலைமையில் இந்திய மண்ணில் முதல் முறையாக தென்ஆப்பிரிக்காவின் சவாலை எதிர்கொள்ள இருக்கிறது. 11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு அவருக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

மொகாலி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவிந்திர ஜடேஜா ஆகிய 3 பேரும் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தடை காரணமாக இஷாந்த் சர்மா முதல் டெஸ்டில் ஆட முடியாது.

ஹசிம் அம்லா தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரை வென்றதால் அந்த அணி டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.