Show all

சோயிப் மாலிக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் சோயிப் மாலிக் அறிவித்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் சோயிப் மாலிக்.இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடி இருக்கும் மாலிக், 1860 ரன்களும், 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பின் 5 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் சோயிப் மாலிக் விளையாடவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு  தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டித் தொடரில் சோயிப் மாலிக் இடம் பிடித்துள்ளார்.

ஆனால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். ஒரு நாள் மற்றும் டி - 20 போட்டிகளில் தாம் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் சோயிப் அறிவித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.