Show all

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நோவாக் ஜோகோவிச் வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை 3-1 எனும் செட் கணக்கில் வென்று பட்டத்தை வென்றார்.

இந்த ஆண்டு அவர் பெற்றுள்ள மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும் இது.

தனது டென்னிஸ் வாழ்க்கையில் ஜோகோவிச் இதுவரை பத்துமுறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தை பார்க்க குழுமியிருந்த ரசிகர்கள் பெருமளவுக்கு ஃபெடரருக்கே ஆதரவை வெளியிட்டனர். ஆனாலும்  அவரால் மேலும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை  பெற இயலாமல் போனது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.