Show all

ஓய்வு பெற்றார் குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர்

தோல்வியே சந்திக்காத அமெரிக்காவை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் சக நாட்டு வீரர் ஆண்ட்ரே பெர்டோவை வீழ்த்தினார். அத்துடன் அவர் மோதிய போட்டிகள் அனைத்திலும் தோல்வியடையாதவர் என்ற பட்டத்துடன் குத்துச்சண்டை உலகில் இருந்து மேவெதர் விடைபெற்றார்.

வெல்டர்வெயிட் குத்துச்சண்டையில் உலக சாம்பியனான அமெரிக்காவின் புளோயிட் மேவெதர் , கடந்த் 12ஆம் தேதி லாஸ் வெகாசில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்காவின் ஆந்த்ரே பெர்ட்டோ (ANDRE BERTO) உடன் மோதினார். மெகா குத்துச்சண்டைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த போட்டி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்த போட்டியில் தொடக்கும் முதலே அசுர வேகத்தில் குத்துகளை விட்டு மேவெதர் புள்ளிகளை குவித்தார். அனைத்து சுற்றுகளின் முடிவில் 118–110, 117–111, 120–108 என்ற புள்ளி கணக்கில் மேவெதர் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

மேவெதரை எதிர்த்து போட்டியிட்ட 31 வயதான பெர்ட்டோ, முன்னதாக 33 ஆட்டங்களில் 23 நாக் அவுட் உள்பட 30 போட்டியில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேவெதரின் குத்துச்சண்டை வாழ்க்கையில் 26 முறை நாக்-அவுட் செய்துள்ளார். 49வது போட்டியிலும் வெற்றி பெற்றதால் தொடர்ச்சியாக 49 வெற்றிகளை பெற்ற முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியன் மார்சியானோவின் சாதனையை சமன் செய்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.