Show all

பெமா விதிகளை மீறியதாக ஷாருக்கான் மீது குற்றச்சாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பங்குகளை வெளிநாட்டு  நிறுவனத்திற்கு விற்றதில் பெமா விதிகளை மீறிய வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 3 வது முறையாக சம்மன் அனுப்பட்டுள்ளது.ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக நடிகர் ஷாருக்கான், நடிகை ஜூகி சாவ்லா, அவரது கணவர் ஜெய் மேத்தா உள்ளனர்.

2008–ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பங்குகள் மொரி ஷியஸ் நாட்டு கம்பெனியான சீ ஐலேண்ட் இன்வெஸ்ட் மெண்ட் என்ற நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. குறைந்த மதிப்பீட்டில் இந்த பங்குகள் விற்கப்பட்டதால் அன்னிய செலவாணி விதிமுறைமீறல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.அன்னிய செலவாணி சட்டத்தை மீறி ரூ.100 கோடி கைமாறி உள்ளது. அமலாக் கத்துறையின் தணிக்கையில் இது தெரியவந்தது. கடந்த 2010–ம் ஆண்டு அமலாக்கப்பிரிவு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

கொல்கத்தா அணியின் பங்குதாரர்களான ஜூகி சாவ்லா, ஜெய்மேத்தா ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு கடந்த மே மாதம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.பங்குகள் கைமாறிய விவகாரம் தொடர்பாக ஷாருக்கானுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால்,  பல்வேறு காரணங்களால் அவர் இதுவரை ஆஜராகவில்லை.இந்த நிலையில் ஷாருக்கானுக்கு அமலாக்கத்துறை 3–வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமலாக்க பிரிவு உத்தரவிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.