Show all

சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி உலக சாதனை: தொடர்ந்து 29 போட்டிகளில் வெற்றி

சிட்னி - டென்னிஸ் விளையாட்டில் வெற்றி பெற்றதன் மூலம் சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி உலக சாதனை படைத்துள்ளது. டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளது. சிட்னியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் இந்த சாதனையை எட்டியுள்ளது.

சிட்னி போட்டியின் அரையிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி, ரோமானியாவின் ரலுகா-கஜகஸ்தானின் யாரோஸ்லவா ஜோடியை 4-6, 6-3, 10-8 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.  இது சானியா - ஹிங்கிஸ் ஜோடி தொடர்ச்சியாக பெற்ற 29-வது வெற்றியாகும். இதன்மூலம் 1994-ம் ஆண்டுக்குப் பிறகு மகளிர் இரட்டையர் பிரிவில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வென்ற ஜோடி என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.