Show all

உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன்   ரவிசாஸ்திரி பணியாற்றி வருகிறார். 2016-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை வரை  அவரது பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் வெப்சைடுக்கு அளித்த பேட்டியில் ரவிசாஸ்திரி கூறியதாவது:- 

இலங்கைக்கு எதிரான தொடரில் அஸ்வின் பந்து வீச்சில் முத்திரை பதித்தார். அமைதி மற்றும் பொறுமையால் தான் அவரால் சாதிக்க முடிந்தது. அவரிடம் இருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து கொண்டு அதனை செயல்படுத்தினார். விண்வெளி வீரருக்கு உரிய மூளை போல் அவரின் செயல்பாடு இருந்தது. இதன் மூலம் அவர் அணிக்கு எல்லா வகையிலும் உதவினார். தற்போது உலகின் சிறந்த  சுழற்பந்து வீரர் (ஆப்-ஸ்பின்னர்) அஸ்வின் தான். ஆஸ்திரேலியாவை சேர்ந்த லயனும் சிறந்த வீரர்தான். ஆனால் அஸ்வினிடம் உள்ள ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு விதமாக வீசும் திறன் அவரிடம் இல்லை. 

உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் சங்ககராவை அஸ்வின் `அவுட்' செய்த விதத்தை வைத்து இதனை அணியலாம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் முக்கியத்துவம் பெற்றது. அந்த அணி உலகின் நம்பர் 1 அணியாக  திகழ்கிறது. அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க சீரான முறையில் நாம் விளையாட வேண்டும். இதுதான் நமது திட்டம் எங்களது ஆட்ட பாணியில் மாற்றம் இருக்காது. நெருக்கடியில் இருக்கும் போது எதிர் அணியை அதில் இருந்து மீள நாம் அனுமதிக்க கூடாது. இதற்கு பொறுமை அவசியம். 

ஆஸ்திரேலியாவில் இத்தகைய பொறுமை இல்லை. இலங்கைக்கு எதிரான  முதல் டெஸ்டில் இதே நிலைதான். கட்டு கோப்பும் , பொறுமையும் வந்த பிறகு 2-வது மற்றும்  3-வது டெஸ்ட் போட்டியில் சிறந்த முடிவை காண முடிந்தது. 

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.