Show all

9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 4-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் கேப்டன் அஜிங்கியா ரகானே மற்றும் டார்கி ஷார்ட் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷார்ட் 4 ரன்களில் ஆட்டமிழக்க சஞ்சு சாம்சன் களமிறங்கினார். ரகானே 13  ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சஞ்சு சாம்சன் மட்டும் நிதானமாக விளையாடி 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், பில்லி ஸ்டாண்ட்லேக் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

அதைத்தொடர்ந்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சாகா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் ஷிகர் தவான் 77 ரன்களும், கேன் வில்லியம்சன் 36 ரன்களும் எடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வெற்றி பெற செய்தனர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஜெயதேவ் மட்டும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

2018 IPL Team Position
Rank TEAM M W L NRR Points
1 SRH 1 1 0 +1.771 2
2 KKR 1 1 0 +0.598 2
3 KXIP 1 1 0 +0.567 2
4 CSK 1 1 0 +0.271 2
5 MI 1 0 1 -0.271 0
6 DD 1 0 1 -0.567 0
7 RCB 1 0 1 -0.598 0
8 RR 1 0 1 -1.771 0

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.