Show all

இரண்டாவது T20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய இரண்டாவது T20 போட்டி செஞ்சூரியனில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தசைபிடிப்பால் அவதிப்படும் பும்ரா நீக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது, ரோகித் ஷர்மா டக்-அவுட்டானார். கோஹ்லி 1 ரன்னிலும், ஷிகர் தவான் 24 ரன்களிலும் மற்றும் ரெய்னா 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக மணிஷ் பாண்டே மற்றும் தோனி சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ரன்னை உயர்த்தினார். இறுதியாக இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே 79 ரன்களிலும், தோனி 52 ரன்களிலும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. க்ளாசென் (69) மற்றும் டுமினி (64) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்ரிக்க அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்து வீச்சில் சாகல் அதிகபட்சமாக நான்கு ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டி வென்று சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 24ல் கேப்டவுனில் நடக்கவுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.