Show all

இந்தியன் சூப்பர் லீக் துவக்க விழாவில் நடனம் ஆடும் ஐஸ்வர்யா ராய்

8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி  நாளை (3-ந்தேதி) முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கோலாகல தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது. இதில் இந்தி நடிகைகள் ஐஸ்வர்யாராய், அலியா பாத் ஆகியோரின் கண்கவர் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

இந்த விழாவில் ஐ.எஸ்.எல். சேர்மன் நீட்டா அம்பானி, இந்தி நட்சத்திரம் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த், சென்னையின் எப்.சி. அணியின் இணை உரிமையாளரும், இந்தி நடிகருமான அபிஷேக்பச்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

தொடக்க விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் அதே ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.