Show all

டெல்லி டேர்டெவில்ஸை எளிதாக வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ராகுல் அதிவேக அரை சதம்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 2-வது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று சண்டிகரில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி டெல்லி அணி சார்பில் முன்றோ, கவுதம் காம்பீர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பஞ்சாப் அணியின் கடினமான பந்து வீச்சால் டெல்லி அணி வீரர்கள் மெதுவாக ரன் சேர்த்தனர். முன்றோ 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (11), விஜய் சங்கர் (13) அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் நிலைத்து நின்று ஆடிய கவுதம் காம்பீர்  42 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணியில் கம்பீரை அடுத்து ரிஷப் பந்த் 28 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 27 ரன்களும் குவித்தனர். இறுதியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் மோஹித் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

அதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கேஎல் ராகுல் 14 பந்தில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 16 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மயாங்க் அகர்வாலும் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் 22 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். எனினும் அடுத்து வந்த கருண் நாயர் சிறப்பாக விளையாடி 33 பந்தில் 50 ரன்கள்  குவித்தார். இறுதியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 167 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் 24 ரன்களுடனும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 22 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்தனர். 

டெல்லி டேர்டெவில்ஸ் அணி தரப்பில் போல்ட், மோரிஸ், கிறிஸ்டியன் மற்றும் டிவேசியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

2018 IPL Team Position
TEAM M W L NRR Points
KXIP 1 1 0 +0.567 2
CSK 1 1 0 +0.271 2
KKR 0 0 0 0 0
RR 0 0 0 0 0
RCB 0 0 0 0 0
SRH 0 0 0 0 0
MI 1 0 1 -0.271 0
DD 1 0 1 -0.567 0

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.