Show all

4லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் தமிழகம் சிக்கித்தவிக்கிறது.

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு 2011-ல் பதவி ஏற்கும்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஆனால் தற்போது மொத்தம். 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் தமிழகம் சிக்கித்தவிக்கிறது தமிழகத்தின் கடன் சுமை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

மேலும் புதிய பென்ஷன் திட்டப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பளத்தில் பத்து சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு;, அதே பத்து சதவிகிதம் அரசின் மூலமும் வழங்கப்பட்டு மொத்தம் இருபது சதவிகித சம்பளம் சேமிப்பாக வைக்கப்படுமாம். ஆனால் தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாக சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மத்திய அரசின் ‘‘ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்று வளர்ச்சி ஆணையத்திடம்’’ ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அ.தி.மு.க. அரசின் மீது வைக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளே நடைமுறைக்கு வராதபோது மீண்டும் அதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது தமிழக மக்களை ஏமாளிகளாக கருதி அ.தி.மு.க. அரசு ஏமாற்றுவதாகவே தெரிகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.