Show all

ஒருநாள் போட்டிக்கும் வீராட்கோலியை கேப்டனாக நியமிக்க ஆலோசனை

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்கும் கோஹ்லியை, ஒரு நாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட்  போட்டியில் இருந்து திடீரென ஓய்வு முடிவை டோனி அறிவித்தார். இதனால் வீராட் கோலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுடன் மூன்று 20 ஓவர் ஆட்டம், 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடு கிறது. அக்டோபர் 2-ந்தேதி போட்டித் தொடர் தொடங்கி டிசம்பர் 7-ந்தேதியுடன் முடிகிறது.

ஒருநாள்  தொடரில் டோனிக்கு பதிலாக வீராட் கோலி கேப்டனாக நியமிக்க தேர்வு குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்  வெளி யாகி இருக்கிறது. 20 ஓவர் போட்டிக்கு  மட்டுமே டோனியை தொடர்ந்து கேப்டனாக நீடிக்கப்படுவார் என்று தெரிகிறது.

எதிர்கால இந்திய அணியின் நலனை கருதி வீராட்கோலியை ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்க தேர்வு குழுவினர் ஆலோசனை செய்து வரு கிறார்கள்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.