Show all

சகோதரியை வென்ற செரீனா வில்லியம்ஸ்

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் நடப்புச் சாம்பியனும், உலகின் முதல்நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) கால் இறுதியில், 23ஆம் நிலை வீராங்கனையும் தனது சகோதரியுமான வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை செரீனா 6–2 என்ற கணக்கில் எளிதில் வென்றார். ஆனால், விடா முயற்சியுடன் 2ஆவது செட்டை வீனஸ் வில்லியம்ஸ் 6–1 என்ற கணக்கில் எளிதில் வென்று பதிலடி கொடுத்தார். இருவரும் தலா ஒரு செட்டை வென்று இருந்த நிலையில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் கடைசி செட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த செட்டை செரீனா 6–3 என்ற கணக்கில் போராடி வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் வென்றார். செரீனா வில்லியம்ஸ் அரை இறுதி போட்டியை இத்தாலியை சேர்ந்த ராபர்ட்டா வின்சியுடன் மோதுகிறார்.

மற்றொரு ஆட்டத்தில் தைபே ஜோடியான யங்-ஜேன் சான் மற்றும் ஹவோ சிங் சான் ஜோடியை 7-6, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தினர் சானியா-ஹிங்கிஸ் ஜோடி. இதன் மூலம் மகளிர் இரட்டையர் அரையிறுதிக்கு சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.