Show all

வியாசார்பாடியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்

சென்னை வியாசார்பாடியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மின் வாரியத்தில் அலட்சியம் காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை வியாசர்பாடியில் தங்கம் குடியிருப்பு வழியாக இன்று காலை 4  மணியளவில் நடந்து சென்ற 55 வயது மதிக்கத்தக்க லட்சுமி என்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இன்று புதுமனை புகுவிழாவிற்கு தனது மாட்டுடன் அவர் சென்றார்.  

அப்போது மூன்றாவது செக்டார் வழியாக மாடு செல்லும் போது மாடு மின்சார கம்பியை மிதித்திருக்கிறது. மாட்டை மின்சாரம் தாக்கும் போது மாட்டை காப்பாத்த கயிறை பிடித்து இழுத்துள்ளார். கயிறை பிடித்து இழுத்த போது அவரையும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். பொதுவாக இந்தப் பகுதியில் மின் கம்பங்கள் அனைத்தும் சரியில்லை. பெரும்பாலான மின் கம்பங்கள் சாய்ந்து வருகின்றன. குடியிருப்புகளில் மின் கம்பிகள் படுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மின் வாரியத்திற்கு பல மறை புகார் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 200 குடும்பங்கள் வசிக்கும் தங்கம் குடியிருப்பில் சரியான பாதுகாப்பு இல்லாமல் மின்கம்பங்கள், மின் கம்பிகள் சாய்ந்து விழுவதால் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். முறையான நடவடிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுக்க வேண்டும், என தங்கம் குடியிருப்பு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.