Show all

இந்திய தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 72 நாட்கள் சுற்றுப்பயணமாக விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. அந்த அணி இந்தியாவுடன் மூன்று 20 ஓவர் சர்வதேச போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் மற்றும் 4 டெஸ்ட் கொண்ட தொடரிலும்விளையாட இருக்கிறது. இதில் 4–வது ஒரு நாள் போட்டி அக்டோபர் 22–ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூண்டு வகையான போட்டிக்கு மூன்று வகையாக தேர்வு செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது.

அணிகள் பட்டியல்
தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: ஹஷிம் அம்லா (கேப்டன்), டிவில்லியர்ஸ் (துணை கேப்டன்), டெம்பா பவுமா, டுமினி, பாப் டு பிளிஸ்சிஸ், டீன் எல்கர், சிமோன் ஹார்மர், இம்ரான் தாஹிர், மோர்னே மோர்கல், வெரோன் பிலாண்டர், டேன் பிய்ட், காஜிசோ ரபடா, ஸ்டெயின், ஸ்டியான் வான் ஜில், டேன் விலாஸ்.

ஒரு நாள் போட்டி அணி: டிவில்லியர்ஸ் (கேப்டன்), கைல் அப்போட், அம்லா, பெஹர்டைன், குயின்டான் டி காக், டுமினி, பாப் டு பிளிஸ்சிஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், ஆரோன் பாங்கிசோ, காஜிசோ ரபடா, ரைலீ ரோசவ், ஸ்டெயின்.

20 ஓவர் போட்டிக்கான அணி: பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), கைல் அப்போட், அம்லா, பெஹர்டைன், குயின்டான் டி காக், மெர்சாந்த் டி லங்க், டிவில்லியர்ஸ், டுமினி, இம்ரான் தாஹிர், எட்டி லீ, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், காஜிசோ ரபடா, டேவிட் வைஸ், கயா ஜோண்டா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.