Show all

இணையத்தில் தீப்பரவல் 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி'! ஒற்றுமைசிலை என்பது இப்படி எழுதப்பட்டுள்ளது நடுவண் அரசால்

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலத்திலுள்ள சரோவர் அணை அருகே கட்டப்பட்ட 182 மீட்டர் உயர, சீனா செய்து கொடுத்த, சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை தலைமை அமைச்சர் மோடி நாட்டுக்கு அர்பணித்து உரையாற்றினார். 

ரூ.2,989 கோடியில் 600 அடி உயரத்தில் உருவாகியுள்ள இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு ஒற்றுமைசிலை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனை மொத்தம் 10 மொழிகளில் குறிப்பிட்டுள்ளார்கள். 

தமிழில் ஒற்றுமை சிலை என்பதை 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதையடுத்து ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்ற நடுவண் அரசின் மொழி பெயர்ப்பு ஆற்றல், மற்றும் தமிழ், தமிழர் மீது நடுவண் அரசு கொண்டிருக்கிற ஈடுபாடு ஆகியவற்றை சமூகவலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டு கலாய்த்தும், கருத்துப் படங்களை உருவாக்கியும் வருகின்றனர். இந்நிலையில் 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' இணையத்தில் இன்றைய தலைப்பாகியிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,958.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.