Show all

ஆசிய படகுப் போட்டியில் இந்தியா 7 பதக்கம் வென்றது

16-வது ஆசிய படகு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்றது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி நேற்றோடு முடிவடைந்தது. ஆடவர் அணி பிரிவு படகுப் போட்டியில் இந்தியாவின் கபில் சர்மா, ஜஸ்விந்தர்சிங், ராஜேஷ் வர்மா, முகமது ஆசாத் ஆகியோர் அடங்கிய அணி 6 நிமிடம், 03.25 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஆடவர் ஒற்றையர் துடுப்பு படகுப் போட்டியில் இந்தியாவின் தத்து பாபன் போகானல் 7 நிமிடம், 18.41 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளி வென்றார். ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்பு படகுப் போட்டியில் விக்ரம் சிங், ஷோகேந்தர் தோமர் ஜோடி வெள்ளி வென்றது. ஆடவர் இரட்டையர் துடுப்பு படகுப் போட்டியில் இந்தியாவின் ரூபேந்திர சிங்-சோனு லட்சுமி நாராயணன் ஜோடி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

ஆடவர் 8 பேர் படகுப் போட்டியில் இந்தியாவின் தேவிந்தர் சிங், நவீன் குமார், சுச்சா சிங் தோமர், குரீந்தர் சிங், கபில் சர்மா, ஜஸ்விந்தர் சிங், ராஜேஷ் வர்மா, முகமது ஆசாத் ஆகியோர் அடங்கிய அணி வெள்ளி வென்றது.

ஆடவர் இரட்டையர் படகுப் போட்டியில் நவீன் குமார்-தேவிந்தர் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென் றது. ஆடவர் லைட்வெயிட் ஒற்றை யர் துடுப்பு படகுப் போட்டியில் இந்தியாவின் துஷ்யந்த் வெண் கலம் வென்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.