Show all

பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி தோல்வி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டுவென்டி-20' பயிற்சி போட்டியில் வோரா, மயங்க் அதிரடி காட்ட இந்தியா 'ஏ' அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 'டுவென்டி-20', 5 ஒரு நாள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன் டில்லியில் இன்று (செப்டம்பர் 29ம் தேதி) நடந்த பயிற்சி போட்டியில் (டுவென்டி-20) இந்தியா 'ஏ', தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

டுமினி அசத்தல்: தென் ஆப்ரிக்க அணிக்கு டிவிலியர்ஸ் (37) அதிரடி காட்டினார். குயின்டன் டி காக் (2) சொதப்பினார். டுபிளசி (42) 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். டுமினி அரை சதம் கடந்தார். மில்லர் 10 ரன்களில் திரும்பினார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. டுமினி (68), பெகார்தியன் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

மயங்க் அதிரடி: பின் களமிறங்கிய இந்தியா 'ஏ' அணிக்கு மனன் வோரா, மயங்க் அகர்வால் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். டுமினி பந்தில் வோரா (56) அவுட்டானார். மயங்க் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 'ஏ' அணி 19.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சாம்சன் (31), கேப்டன் மன்தீப் சிங் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.