Show all

அமெரிக்க ஓபன் துவங்கியது: ஷரபோவா விலகல்

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் உள்ள பிளெஷ்ஷிங் மெடோஸ் மைதானத்தில் நேற்று  துவங்கியது.

விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தின் போது பிரபல ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா காலில் காயம் அடைந்தார். காயம் முழுமையாக குணமடையாததால் அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக ஷரபோவா அறிவித்தார். ‘‘துரதிஷ்டவசமாக, இந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் என்னால் பங்கேற்க முடியவில்லை,’’ என்று ஷரபோவா தனது முகநூல் பக்கத்தில்  தெரிவித்துள்ளார். ஷரபோவா விலகியதை அடுத்து அவரது இடத்தில் ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா விளையாடுவார் என

அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நம்பர் 1 வீரரான நோவாக் ஜோகோவிச் இந்த ஆண்டில் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் கனவுடன் இன்று நடைபெறும் முதல் சுற்றில் களமிறங்க உள்ளார். ஏற்கனவே இந்த ஆண்டில் அவர் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  28 வயது ஜோகோவிச் கடந்த 2011ம் ஆண்டிலும் மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். சில டென்னிஸ் நுணுக்கங்களைப் பொருத்தவரை அப்போது இருந்ததை விட இப்போது நன்கு விளையாடி வருவதாக ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

இஷாந்த் சர்மா இலங்கை வீரர் தம்மிக்காவுடன் வாக்குவாதம்


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.