Show all

டையில் முடிந்தது மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க்க வீரர்களான ரோகித் ஷர்மா நான்கு ரன்களிலும் ஷிகர் தவான் 29 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இருப்பினும் பின்னர் வந்த அம்பதி ராயுடு மற்றும் கோலி இருவரும் சிறப்பாக ஆடினார். ராயுடு 73 ரன்களிலும் கோலி 157 ரன்களிலும் ஆட்டமிழக்க, இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து, 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்கியது. ஹெட்மேயர் மற்றும் ஹோப் இன் சிறப்பான ஆட்டத்தால் மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்ததால் ஆட்டம் சாமானில் முடிந்தது. ஹோப் 134 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 123 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  

இப்போட்டியில், கோலி பத்தாயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். இதுவரை இந்தியாவில் சச்சின், கங்குலி, டிராவிட் மற்றும் தோனி மட்டுமே பத்தாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகளவில் அதிவிரைவாக பத்தாயிரம் ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் செய்தார். இதற்கு முன் சச்சின் 259 இன்னிங்க்ஸ்களில் கடந்து இருந்தார். தற்போது கோலி 205 இன்னிங்க்ஸ்களில் பத்தாயிரம் ரன்களை கடந்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.