Show all

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: மோசமான நிலையில் இந்தியா

இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் பந்து வீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக நேற்று ஆட்டம் 4  மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல், சுரங்கா லக்மல் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து ஷிகர் தவான் 8 ரன்களிலும் கேப்டன் விராட் கோலியும் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 17 ரன்களுடன் இருந்த போது மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. புஜாரா 8 ரன்களுடனும், ரஹானே றன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று இரண்டாவது நாளும் இந்தியா அணியினர் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். ரகனே மற்றும் அஷ்வின் 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார். இந்திய அணி 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழை குறிக்கிட்டதால் இரண்டாவது நாள் ஆட்டமும் முடிவுக்கு வந்தது. புஜாரா 47 ரன்களுடனும் சகா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.