Show all

ஆப்கானித்தான் உள்நாட்டுப் போர்! தொடரும் படுகொலைகள்

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆப்கானித்தான் என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானித்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு தெற்கு ஆசியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள நடு ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் மத்திய கிழக்கு நாடாகவும், தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்படுவதுண்டு. 

மேற்கே, ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாக்கிஸ்தானை எல்லையாக உடையது. வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காசுமீரினூடாகச் செல்கிறது. 

இந்தியாவை வர்த்தகம் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களுக்காக மத்திய ஆசியாவுடன் இணைக்கும் பெருவழிப்பாதைகள் ஆப்கானித்தான் வழியேதான் செல்கின்றன. 45 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆப்கானித்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது. ஆயினும், சில படைத்துறை அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் தலீபான் இனவாதிகளும், அதற்கு எதிராக ராணுவமும் போரை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் அங்கு பால்க் மாகாணத்தில் சார்போலாக், பால்க் மாவட்டங்களில் பதுங்கி உள்ள தலீபான் இனவாதிகளை குறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் கடும் குண்டுவீச்சில் மூன்று நாட்களுக்கு முன்பு ஈடுபட்டது. 24 மணி நேரத்தில் நடந்த குண்டுவீச்சில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதை ஆப்கானிஸ்தான் வடக்கு பிராந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் முகமது ஹனீப் ரேசாய் உறுதி செய்தார்.

மஷார் இ ஷெரீப் நகரத்தில் இருந்து தொலைபேசி வழியாக பேசிய அவர் ராணுவம் நடத்திய தாக்குதலின்போது 3 பயங்கர வாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். தலீபான் இனவாதிகளை அங்கு முழுமையாக ஒழிக்கிறவரையில் தாக்குதல்கள் தொடரும் என அவர் குறிப்பிட்டார். இதுபற்றி தலீபான் இனவாதிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் அதே நாளில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் முகமது நபியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தினை குறிக்கும் வகையில், திருமண மண்டபம் ஒன்றில் மதகுருக்கள் தலைமையில் மீலாது நபி விழா கூட்டம் நடந்தது.

அப்போது அங்கு திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது.
 
இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி நஜீப் டேனிஷ் கூறும்பொழுது, முதற்கட்ட தகவலின்படி இது தற்கொலை தாக்குதல் என தெரிய வந்துள்ளது. பலி மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ கடந்து இருக்கும் என கூறினார்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்தவொரு தீவிரவாத குழுக்களும் போறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் குறித்து தீவீர விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று மீண்டும், ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த ராணுவ முகாமில் உள்ள மசூதியை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் மசூதியில் இருந்த 27 படைவீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 
தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.  படுகாயம் அடைந்தவர்களை மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,980.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.