Show all

காமன்வெல்த் போட்டியில் நான்கு பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்தியா

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி என மொத்தம் நான்கு பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது இரண்டாம் நாள் நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது. 14 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 36 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 9 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 18 பதக்கங்கள் பெற்று இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் ஏப்ரல் 4-ஆம் தேதி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.

48 கிலோ எடை பிரிவில் சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கமும், ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் 56 கிலோ எடை பிரிவில் குருராஜா வெள்ளிப்பதக்கமும், 53 கிலோ எடைப்பிரிவில் சஞ்சிதா பானு தங்கப்பதக்கமும் மற்றும் 69 கிலோ எடைப்பிரிவில்  தீபக் லாதர் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியா நான்கு பதக்கங்களை பெற்றுள்ளது. நான்கும் பளு தூக்கும் போட்டியிலிருந்து கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Thanks to bbc.com for image.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.