Show all

மூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் பும்ரா மற்றும் குல்தீப் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக, டேரன் பிராவோ 43 ரன்கம், நிகோலஸ் பூரன் 53 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா சார்பில் சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 4 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். எனினும், ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர். இறுதியில், இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 62 பந்துகளில் 92 ரன்களும், ரிஷப் பந்த் 38 பந்துகளில் 58 ரன்களும் குவித்தனர். கடைசி கட்டத்தில் இவ்விருவரும் ஆட்டமிழந்ததால் ஆட்டம் இறுதி பந்து வரை பரபரப்பாக  சென்றது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.