Show all

விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா அபாரம்: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இந்திய வென்றுள்ள நிலையில், இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இடத்தியடுத்து முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஹெட்டிமர், 76 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் சாகல் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் முகமது சாமி தலா 2 விக்கெட்டுகளையும் மற்றும் கலீல் அகமது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான தவான் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் சிறப்பாக விளையாடி சதமடித்தனர். விராட் கோலி 140 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா 42.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் ஷர்மா 152 ரன்களுடனும், அம்பாதி ராய்டு 22 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தாமஸ் மற்றும் பிஷூ தல ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.