Show all

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நான்காவது போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில்  டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் 38 ரன்களிலும் அடுத்து வந்த கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 17-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களை சேர்ந்திருந்தது. இதையடுத்து, ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மாவும் ராயுடுவும் சிறப்பாக விளையாடினர். ரோஹித் சர்மா 137 பந்துகளில் 162 ரன்களும், ராயுடு 81 பந்துகளில் 100 ரன்களும் குவித்தனர். அடுத்து வந்த தோனி 23 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் இந்திய அணி, 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேமர் ரோச் 2 விக்கெட்டுகளையும், நர்ஸ் மற்றும் பால் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் மேற்கு இந்திய தீவுகள் அணி 36.2 ஓவர்களில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கலீல் அகமது மற்றும் குல்தீப் தலா மூன்று விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.