Show all

அடுத்த ஆங்கில ஆண்டிற்கான தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்த ஆங்கில ஆண்டிற்கான தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் 23 அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
1.ஆங்கிலப் புத்தாண்டு. 2.பொங்கல் திருநாள். 3.திருவள்ளுவர் நாள். 4.உழவர் திருநாள் மாட்டுப் பொங்கல் 5.குடியரசு நாள் 6.வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு 7.தெலுங்கு ஆண்டுப் பிறப்பு 8. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் 9.மகாவீரர் பிறந்த நாள் 10.புனித வெள்ளி 11.தொழிலாளர் நாள் 12.ரம்ஜான் 13.பக்ரீத் 14.விடுதலை நாள் 15.மாலன் பிறந்த நாள் 16.விநாயகர் சதுர்த்தி 17.மொகரம் 18.காந்தி பிறந்த நாள் 19.ஆயுத பூசை 20.விஜய தசமி 21.தீபாவளி 22.மிலாதுன் நபி 23.கிருத்துநாதர் பிறந்த நாள் ஆகிய இருபத்தி மூன்று நாட்களை விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது தமிழக அரசு. ஆடிப்பெருக்கு விழா, கார்த்திகை விளக்குத் திருவிழா ஆகிய தமிழர் இயற்கை போற்றும் விழாக்களுக்கு வழக்கம் போல் விடுமுறை இல்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,955.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.