Show all

தெருஇசைக் கலைநிகழ்ச்சி நிறுத்தப்பட்டது! மோடி குறித்த திறனாய்வு பாடல்கள் பாடப்பெற்றதாம்; நம்ம சென்னையில்தான்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை பெசன்ட் கடற்ரையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் இந்தியத் தலைமைஅமைச்சர் நரேத்திர மோடியை விமர்சிக்கும் வகையில் பாடல் பாட அனுமதிக்க முடியாது எனக் கூறி நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஞாயிறு இரவு சாதியமறுப்புக் குழுவின் தெரு இசைக் கலை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது மோடி என்ற பெயர் இடம்பெற்ற பாடல்கள் பாடப்பட்டன. 

இதனைக் கேட்ட கடற்ரையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தலைமைஅமைச்சர் மோடியை விமர்சிக்கும் வகையில் பாடல் பாட அனுமதிக்க முடியாது எனக் கூறி நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளனர். 

மோடி என்ற பெயர் தலைமை அமைச்சர் மோடிக்கு மட்டும் இல்லை என்றும் நிரவ் மோடி, லலித் மோடி என பலர் இருக்கிறார்கள் என்றும் கூறி நிகழ்ச்சியை நடத்தியவர் வாதிட்டபோதும் இசை நிகழ்ச்சையைத் தொடர அனுமதிக்கவில்லை.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசை கற்ற பாடகர் டி.எம்.கிருஷ்ணா, 'விமர்சனம் தவறான முறையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அனைவருக்கும் கருத்து உரிமை அளிக்க வேண்டும். என்றார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,047.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.